Friday, June 21, 2013

மருத்துவ முகாம்

சிவகாசி சத்யசாயி சேவா சமிதி, மதுரை அரவிந்த் கண் ஆஸ்பத்திரி இணைந்து, இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தியது. 434 பேருக்கு பரிசோதனை செய்து, 110 பேர் ஆப்ரேஷனுக்கு தேர்வு செய்யப்பட்டனர். மதுரை எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை டாக்டர் ராமசுப்பிரமணியம் தலைமையில் சிறப்பு மனநல மருத்துவ முகாமும் நடந்தது. 234 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை சத்யசாயி சேவா சமிதியினர் செய்திருந்தனர்.


News from 

Thursday, June 20, 2013

Anna Market in 2003


Photo taken on 4/4/2003 in Anna Market.


லோடு ஆட்டோவில் ஆட்கள் லைசென்ஸ் ரத்து எச்சரிக்கை ஆலோசனை கூட்டத்தில் முடிவு

லோடு ஆட்டோக்களில் ஆட்களை ஏற்றி சென்றால், வாகன உரிமம், டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என, ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சிவகாசியில் பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் முறைப்படுத்த ஆலோசனை கூட்டம் நடந்தது. டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சுரேஷ், தொடக்க கல்வி அலுவலர் தாமோதரன் முன்னிலை வகித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பார்த்தீபன், ராஜா, சுந்தரபாண்டியன், டிராபிக் இன்ஸ்பெக்டர் ராஜாராம், எஸ்.ஐ., மருதுபாண்டி, அரசு, அரசு உதவி பெறும், மெட்ரிக்., பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள், ஆட்டோ டிரைவர்கள், லோடு ஆட்டோ வாகன ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.
பள்ளி குழந்தைகளை வாகனங்களில் பாதுகாப்பாக ஏற்றி செல்வது குறித்தும், அளவிற்கு அதிகமான பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்ல கூடாது என, வலியுறுத்தப்பட்டது.

மினிலோடு ஆட்டோக்களில் பொருட்களை தவிர, எந்த சூழ்நிலையிலும் ஆட்களை ஏற்றி செல்ல கூடாது. ஆட்களை ஏற்றி சென்றால், மினிலோடு ஆட்டோவின் உரிமம், டிரைவர் லைசென்ஸ் ரத்து செய்யப்படும். பள்ளி மாணவர்கள் பிற வாகனங்களில் லிப்ட் கேட்டு செல்ல கூடாது என்பதையும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை உரிய வாகனங்கள், அல்லது பஸ்களில் அனுப்பி வைக்க வேண்டும். டூவீலரில் பெற்றோர்களே அதிகமானவர்களை ஏற்றி செல்வதை தவிர்க்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது. 


News from 

2 பட்டாசு ஆலை சஸ்பெண்ட்

அனுமதியில்லாத பட்டாசு ரகங்கள் தயாரித்த இரு பட்டாசு ஆலைகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளன.சிவகாசி பகுதி பட்டாசு ஆலைகளில், 5 குழுக்கள் திடீரென ஆய்வு நடத்தி வருகின்றனர். விதிமீறும் ஆலைகளை சீல் வைக்கின்றனர். நேற்று, சிவகாசி தீப்பெட்டி, பட்டாசு தனித் தாசில்தார் ராமச்சந்திரன் தலைமையில் ,ஓ.கோவில்பட்டியில் உள்ள காசி பயர் ஒர்க்ஸ், ஓண்டிப்புலி நாயக்கனூரில் உள்ள ஸ்ரீராம் பயர் ஒர்க்ஸ் ஆலைகளை, ஆய்வு செய்தனர். இந்த ஆலை டி.ஆர்.ஓ., லைசென்சில் செயல்படுகிறது. இங்கு குறிப்பிட்ட 8 ரக பட்டாசு மட்டுமே தயாரிக்க வேண்டும். ஆனால், அனுமதி இல்லாத டபுள் சவுண்ட் பட்டாசு தயாரிப்பது ஆய்வில் தெரிந்தது. அனுமதி இல்லாத ரக பட்டாசுகளை தயாரித்தற்காக, இரு ஆலைகளையும் சஸ்பெண்ட் செய்யப்பட்டது. 

News from 

கோவில் பிரச்சனை: கோட்டாட்சியர் தலைமையில் அமைதிபேச்சு

News from 


சிவகாசி அருகே கோவில்பிரச்சனை தொடர்பாக செவ்வாய்கிழமை கோட்டாட்சியர் எஸ்.ஜி.ரெங்கன் தலைமையில் அமைதிக்கூட்டம் நடைபெற்றது.

சிவகாசி அருகே வெள்ளையாபுரத்தில் புதிதாக காளியம்மன்கோவில் கட்டப்பட்டது. இக்கோவில் கட்டஅமைக்கப்பட்ட குழு வினர் இது வரை கணக்கு கொடுக்க வில்லையாம். கணக்கு கொடுத்துவிட்டுதான் கோவிலைதிறக்கவேண்டும் என ஒரு தரப்பினர் கூறினார்களாம். இதையடுத்து இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டதால் கோவில் விழா கொண்டாடமுடியாத நிலை ஏற்பட்டது.பின்னர் இது குறிக்கு கோட்டாட்சியர் தலைமையில் அமைதிக்கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் வரவு செல்லு மற்றும் நன்கொடை வசூல் செய்த ரசீது புத்தகம் உள்ளிட்டவைகளை வட்டாட்சியரிம் 25.6.2013ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.நன்கொடை நிலுவை யை வசூல் செய்து,31.7.1013ஆம் தேதிக்குள் கல்வெட்டு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்டமுடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.இக்கூட்டத்தில் அக்கிராம நாட்டாமை செல்லக்கனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.