Wednesday, June 19, 2013

மாவட்ட செஸ் போட்டி - சிவகாசி மாணவருக்கு பரிசு

News from
ராஜபாளையம்: மாவட்ட செஸ்போட்டியில், சிவகாசி ஜேசீஸ் மெட்ரிக்., பள்ளி மாணவர் வினோத் குமார் முதல் பரிசு பெற்றார்.
ராஜபாளையம் செஸ் கிளப் சார்பில், மாவட்ட அளவிலான போட்டிகள் ஆர்.ரெட்டியபட்டியில் நடந்தன. 40 பள்ளி, கல்லூரிகளில் இருந்து 170 மாணவர்கள் பங்கேற்றனர். ஒன்பது வயது பிரிவில், சிவகாசி ஜேசீஸ் மெட்ரிக்., பள்ளி மாணவர் வினோத் குமார், ராஜபாளையம் ரமணா மெட்ரிக்., பள்ளி மாணவி ராஜலட்சுமி முதல் பரிசு பெற்றனர். சிவகாசி ஸ்ருதி மெட்ரிக்., பள்ளி மாணவர் ஜஞ்சன், விருதுநகர் வி.எஸ்.கே.டி., மெட்ரிக்., பள்ளி மாணவி ஜெயனி இரண்டாம் பரிசு பெற்றனர். 
12 வயது பிரிவில், விருதுநகர் கே.வி.எஸ்., மெட்ரிக்., பள்ளி மாணவர் சிவநடராஜ், சிவகாசி லயன்ஸ் மெட்ரிக்., பள்ளி மாணவி அக்ஷயா முதல் பரிசு, விருதுநகர் கே.வி.எஸ். மெட்ரிக்., பள்ளி மாணவர் கோகுல், ராஜபாளையம் அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவி ஹரிணி இரண்டாம் பரிசு பெற்றனர். 
19 வயது பிரிவில், விருதுநகர் நோபல் மெட்ரிக்., பள்ளி மாணவர் ரித்தீஸ், ராஜபாளையம் அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவி விஷ்ணு பிரபா முதல் பரிசு பெற்றனர். சிவகாசி லயன்ஸ் மெட்ரிக்., பள்ளி மாணவர் அருண்குமார், ராஜபாளையம் அம்மணி அம்மாள் பெண்கள் மெட்ரிக்., பள்ளி மாணவி சாருதர்ஷிணி இரண்டாம் பரிசு பெற்றனர். 
மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில், செஸ் கிளப் தலைவர் கோபால்சாமி பரிசு வழங்கினார். ஏற்பாடுகளை கிளப் செயலாளர் மெய்யப்பன் செய்திருந்தார். 

No comments:

Post a Comment