News from Dinamani
விருதுநகர் மாவட்ட மாற்றுத் திறனாளிகளிடமிருந்து இலவசமாக மூன்று ஆண்டு பட்டயப் படிப்பு மற்றும் 3 மாத தொழில் நுட்பப் பயிற்சி பெறுவதற்கு அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மத்திய அரசின் சிறப்பு ஒதுக்கீட்டின் அடிப்படையில் கை, கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இக்கல்லூரியில் கட்டடப் பிரிவு, எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில் நுட்பம், அச்சுக்கலை, இயந்திரவியல், எலெக்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கணிப்பொறியியல் பட்டயம் ஆகிய பிரிவுகளில் மூன்று ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் சேர்ந்து படிக்கிறவர்களுக்கு படிப்புக் கட்டணம் இலவசமாக அளிக்கப்படும். மேலும், மாதந்தோறும் கல்வி உதவித் தொகை மற்றும் பயணப்படியும் வழங்கப்படும். அதேபோல், அச்சு, தையல், மின்சாதன வீட்டு உபயோகப் பொருள்கள் பழுது நீக்கம் பயிற்சி, ஸ்கிரின் பிரிண்டிங் உள்ளிட்ட 3 மாத பயிற்சியும் அளிக்கப்பட இருக்கிறது. இப்பயிற்சிகளை பெறுவதற்கு 40 சதவீதம் முதல் 60 சதவீதம் வரையில் ஊனத்தின் தன்மை இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்கவும் வேண்டும். 10-வது அல்லது 12-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம் ஆகும்.
விருதுநகர்-சிவகாசி சாலையில் அமைந்துள்ள அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் விண்ணப்பங்களை நேரில் இலவசமாக வருகிற 26ஆம் தேதிக்குள் பெற்று விண்ணப்பித்து பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:
Post a Comment