Wednesday, June 19, 2013

விருதுநகர் மாவட்டத்தில் 100 துவக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி துவக்க உத்தரவு

News from Dinakaran

விருதுநகர், : மாவட்டத்தில் நடப்பு கல்வி யாண்டில் 101 துவக்க மற் றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி யை துவக்க வேண்டுமென வும் அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டு முதல் 1 மற்றும் 6ம் வகுப்புகளில் ஆங்கில வழி வகுப்புகளை துவக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

 விருதுநகர் மாவட்டத்தில் 1109 ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள், 252 நடுநிலைப்பள்ளிகள், 151 உயர்நிலைப்பள்ளிகள், 169 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 1681 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் 101 பள்ளிகளில் நடப்பாண்டில் ஆங்கில வழிக்கல்வி வகுப்புகள் துவக்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு ஆங்கில வழி வகுப்பினை துவக்க குறைந்த பட்சம் 10 மாணவ, மாணவியர் இருக்க வேண் டும். இது தொடர்பாக கல்வித்துறை உயர்அதிகாரிகள் கூறுகையில், மாவட் டத்தில் நடப்பாண்டில் 101 பள்ளிகளில் ஆங்கில வழிகல்வி வகுப்புகள் துவக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அறிவிப்பு வெளியாவதில் தாமதம் மற்றும் மக்களிடன் விழிப்புணர்வு குறைவால் குறைந்தபட்சம் 50 பள்ளிகளில் ஆவது ஆங்கில வழிக்கல்வி துவக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில் ஆவடையாபுரம், சங்கரலிங்கபுரம், மேட்ட மலை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள், சென்நெல்குடி நடுநிலைப்பள்ளி உட்பட 31 பள்ளிகளில் நேற்று வரை ஆங்கில வழிக்கல்வி வகுப்பு துவக்கப்பட்டுள்ளது. சில தினங்களில் 50 பள்ளிகளில் துவக்கப்பட்டு விடும். மேலும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் மூலம் ஆங்கில வழிகல்வி வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

No comments:

Post a Comment