News from Dinamalar
விருதுநகர் மாவட்ட இறகு பந்து கழகம் சார்பில், சிவகாசி ஏ.ஜே., ஸ்டேடியத்தில், மாவட்ட இறகு பந்து சாம்பியன் ஷிப் போட்டிகள் 15, 16 இரு நாட்கள் நடைபெறுகிறது.
10, 13, 15, 17, 19 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு, ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகள் நடைபெறுகிறது. 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகள் நடைபெறுகிறது.
பங்கேற்க விரும்புவோர், வயதை உறுதிபடுத்துவதற்கான சான்றுடன், இன்று (14ம்தேதி) இரவு 7 மணிக்குள்,பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒற்றையர் போட்டிக்கு 125 ரூபாயும், இரட்டையர் போட்டிக்கு 250 ரூபாயும் செலுத்தி, முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பங்குபெறுவோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். 16ம்தேதி மாலை பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.
பரிசுகளை ரங்கநாயகி வரதராஜ் இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் நீதி மாணிக்கம் வழங்குகிறார். மேலும் விபரங்களுக்கு, விருதுநகர் மாவட்ட இறகு பந்து கழக செயலாளர் செந்தியப்பனை, மொபைல் எண் 99949 20063ல்தொடர்பு கொள்ளலாம்.

No comments:
Post a Comment