சிவகாசி அருள்மிகு விஸ்வநாதசுவாமி-விசாலாட்சி அம்மன் கோயில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழாவினையொட்டி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. வைகாசி பிரம்மோற்சவ திருவிழா ஜூன் 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினசரி காலை மற்றும் மாலை சுவாமி வீதி உலா நடைபெற்றது. வியாழக்கிழமை கழுகேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. வெள்ளிக்கிழமை சுவாமி பிரியாவிடையுடன் தபசு காட்சி அளித்தார். இதையடுத்து திருகல்யாணம் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. பக்தர்கள் வடம் பிடித்து, தேர் இழுத்தனர்.
No comments:
Post a Comment