Saturday, April 2, 2011

செங்கோட்டை-மதுரை ரயில் நான்கு முறை இயக்க மனு

                சிவகாசி : சாத்தூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த பொது மேலாளரிடம், ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் ஏ.பி.செல்வராஜன் அளித்த மனு:
 
செங்கோட்டை
-சென்னை இடையே தஞ்சாவூர், விழுப்புரம் வழியாக செல்ல புதிய ரயில் இயக்க வேண்டும். தினமும் மூன்று முறை இயக்கப்படும் மதுரை-செங்கோட்டை ரயிலை, நான்கு முறை இயக்க வேண்டும். கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும். செங்கோட்டை-மதுரை ரயிலை, இரவில் கோயம்புத்தூர் வரை இயக்க வேண்டும். வாரத்தில் 2 நாட்கள் சென்னை - செங்கோட்டை இடையே சிறப்பு ரயில் இயக்க வேண்டும். திருநெல்வேலி - தென்காசி- செங்கோட்டை - புனலூர் அகல ரயில்பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும். சாட்சியாபுரத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும், என வலியுறுத்தி உள்ளனர்.

No comments:

Post a Comment