Saturday, April 2, 2011

ஏ.ஜெ., ஸ்டேடியத்தில் பூப்பந்தாட்ட பயிற்சி

                   சிவகாசி ஏ.ஜெ., ஸ்டேடியத்தில் ஏப்ரல் 14 முதல் 30 வரை 80 மாணவர்களுக்கு பூப்பந்தாட்ட பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஏழு முதல் 16 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். உடல் தகுதி மருத்துவ சான்றுடன் வர வேண்டும். தினமும் காலை 7.30 முதல் 9.30 மணி வரையும், மாலை 4 முதல் மாலை 6 மணி வரை சிறந்த பயிற்சியாளர்களால் பயிற்சி அளிக்கப்படும். கட்டணம் 1500 ரூபாய்.பயிற்சிக்கு வருவோர் சாட்ஸ், டி-சர்ட், ஷூ, ஷட்டில் ராக்கெட் கொண்டு வர வேண்டும். பங்கேற்போருக்கு சான்றிதழ் அளிக்கப்படும். சிறந்த வீரர்களை மாவட்ட அளவிலான போட்டியிலும், தொடர்ந்து விளையாட ஊக்குவிக்கப்படும். மேலும், பங்கு பெற விரும்புவோர் நேரிடையாகவும், 99949 20063லும் பெயர்களை பதிவு செய்யலாம்.இந்த ஸ்டேடியத்திற்கு ஜூலையில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வர உள்ளார். அப்போது "விளையாட்டும், கல்வியும்' என்ற தலைப்பில் பேசுகிறார். பின்னர் விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடுகிறார். இதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக செயலாளர் செந்தியப்பன் கூறினார்.

No comments:

Post a Comment