சிவகாசி அருகே மாரனேரி, பர்மா காலனியில் ஜே.கே., டிரேடர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பட்டாசு குடோன் உள்ளது. நேற்று முன்தினம் இரவு11 மணிக்கு, மினி வேனில் இருந்து கம்பி மத்தாப்பு பண்டல் இறக்கும்போது கைதவறி கீழே விழுந்து தீ பிடித்தது. குடோனிலும் தீப்பிடித்து அதிகாலை வரை எரிந்தது. சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். மாரனேரி போலீசார் விசாரித்து வருகின்றனர். (news from Dinamalar)
No comments:
Post a Comment