News from Dinamalar
சிவகாசி பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கத்திற்கு 23 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கு முடிவிற்கு வந்தது. 52 சென்ட் இடம் கையகப்படுத்தப்பட்டது.
சிவகாசி நகராட்சி பஸ் ஸ்டாண்ட் ஒன்னரை ஏக்கர் பரப்பில் செயல்பட்டு வருகிறது.மூன்றாம் நிலை பஸ் ஸ்டாண்ட்டாக உள்ளது.இங்கு தினமும் 210 பஸ்கள் வந்து செல்கின்றன. பஸ் ஸ்டாண்டிற்கு இடம் போதுமானதாக இல்லாததால் நெருக்கடியில் செயல்பட்டு வந்தது. பஸ் ஸ்டாண்டை ஒட்டி கிழக்கு பகுதியில் ரவிசங்கர் என்பவருக்கு சொந்தமான 52 சென்ட் இடம் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கத்திற்கு தேவை என நகராட்சி கோரி வந்தது.
இடத்தின் உரிமையாளர் தனக்கு தேவை என கூறி இடத்தை வழங்க மறுத்தார். நகராட்சி நிலத்திற்கு ரூ.27 லட்சம் நில மதிப்பு நிர்ணயம் செய்து தொகை வழங்க முன் வந்தது. ரவிசங்கர் இடத்தை வழங்க மறுத்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இவ் வழக்கு 23 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. தற்போது இவ் வழக்கில் சிவகாசி பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கத்திற்கு இடத்தை எடுத்து கொள்ள தீர்ப்பு வழங்கியுள்ளது. நகராட்சி நிர்வாகம் மணல் அள்ளும் இயந்திரம் மூலம் இடத்தை சுத்தம் செய்யும் பணிகளை துவக்கி உள்ளனர். பஸ் ஸ்டாண்டிற்கும், காலி இடத்திற்கு இடையே உள்ள தடுப்பு சுவரை டவுன் பிளானிங் அனுமதி பெற்று சுவர் அகற்றப்பட உள்ளது.
நகராட்சி துணை தலைவர் அசோகன் கூறுகையில்,""பஸ்கள் நிறுத்துவதற்கு வசதியாக ரூ. 2 லட்சம் செலவில் சிமென்ட் தரை, கழிவு நீர் ஓடைகள் அமைக்கப்படும். தற்போது 10 பஸ்கள் நிறுத்துவதற்காக பஸ் தடம் உள்ளது. இடம் விரிவாக்கம் செய்து இன்னும் 25பஸ்கள் நிறுத்த தடம் அமைக்கலாம். இரண்டாம் நிலை பஸ் ஸ்டாண்டாக தரம் உயரும். நகராட்சிக்கு வருவாய் அதிகரிக்கும். இடநெருக்கடி இன்றி பஸ் ஸ்டாண்ட் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
No comments:
Post a Comment