Sunday, August 19, 2012

சிவகாசி ஆக்கிரமிப்பு பற்றி



எங்கள் ஊரில் இரண்டு குளங்கள் உண்டு... பெரியகுளம், சின்னகுளம் என்று அழைத்து வருகிறார்கள்.... எங்கள் கந்தக பூமியின் நீராதாரம் இவை.... என் வாழ்வில் இரண்டே இரண்டு முறை தான் இவை நிரம்பி உள்ளன.... ரெண்டு குளங்களின் கரைகளிலும் ஆக்கிரமிப்புக்கள்... மூன்று காலனிகள் உருவாகி விட்டன ஆக்கிரமிப்பில்... தண்ணி வருவதற்கான வழிகள் அனைத்தும் முடக்கம்... கடந்த பத்து வருடங்களாக எவ்வளவோ கஷ்டப்பட்டு அரசு சக்கரமும் சுழன்ற...
ு உச்ச நீதிமன்றம் வரை சென்று ஆக்கிரமிப்புகளை அகற்ற 17 ஆம் தேதி குறித்தாகி விட்டது..... இவற்றில் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களே அதிகம் உள்ளனர்.... அவர்களும் கார்த்திக், விஜயகாந்த் என்று எவ்வளவோ தலைவர்களை (சிரிக்க கூடாது) வரவழைத்து கோரிக்கை வைத்தனர்... பலன் இல்லை.... உண்ணா விரதம், கருப்பு கொடி போராட்டங்கள் எல்லாம் செய்தும் பலன் இல்லை... இறுதியாக அரசு நேற்று இரவே ஆயுத்தம் ஆனது... மின்சார ஊழியர்களுக்கு விடுப்பு இல்லா பணிஉத்திரவு... மாவட்டத்தின் அனைத்து நகராட்சி ஊழியர்களும் வந்து சேர்ந்தனர்.... 15 JCB இயந்திரங்கள் வந்து சேர்ந்தன... இன்று காலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி ஆரம்பிக்கபட்ட போது ஒரு ஆட்டோ டிரைவர் (கணேஷன் என்று பெயர்) தீ குளித்து அவன் வீட்டின் மாடியிலேயே இறந்து போனான்.... இதனை கண்டு சம்பவ இடத்தில் இருந்த அதிகாரிகள் தற்காலிகமாக அந்த பணியினை நிறுத்தி வைத்தனர்... பின்பு கலெக்டர் வந்து அந்த பணியினை 22 ஆம் தேதி வரை ஒத்தி வைத்தார்... இதற்கிடையே ஊடகங்கள் தங்கள் பணியினை திறம்பட செய்து ரேட்டிங் உயர்த்தி கொண்டு இருந்தனர்.... அவன் தீ குளிப்பதை வீடியோ எடுத்து மாற்றி மாற்றி ஒளிபரப்பினர்... புதிய தலைமுறை தவிர்த்து....

இறுதி ஊர்வலம்... கடைகள் அடைக்கப்பட்டன... அந்த காலனிகளை சேர்ந்த மக்கள் அனைவரும் அணிவகுத்தனர்... ஒரு அம்புலன்சில் உடல்... போலீஸ் பாதுகாப்பு அவ்வளவு... ஸ்பெஷல் கலவர தடுப்பு போலீஸ் வஜ்ரா நீர்பீச்சு வாகனங்களுடன் நடந்தனர்... இரண்டு எஸ்.பிக்கள் வாகனம்... வேடிக்கை பார்க்க கூடிய கூட்டம் இரண்டு புறமும்.. ஏதோ பெரிய அரசியல்வாதிக்கு தர வேண்டிய மரியாதையை போல்... விசயத்துக்கு வருவோம்... இறந்தவரின் பின்னணி - ஒரு கொலை வழக்கு மற்றும் சில வழக்குகள் அவர் மீது உள்ளது.. ஜாமீனில் உள்ளார்.... பெரிதாக வருமானம் இல்லை... மனைவி, இரண்டு குழந்தைகள்... அதுவும் வாடகை வீடு.... அப்புடி முடிவு எடுக்கும் முன் எதற்கு நாம் இந்த முடிவு எடுக்க வேண்டும் என்றோ வீட்டில் உள்ளவர்களையோ நினைத்ததாக தெரியவில்லை... சரி அவர் இறந்து விட்டார்... அந்த சமுதாய மக்கள் கொஞ்சம் வருத்தபடுவார்கள் என்று பார்த்தால் அதுவும் இல்லை.... அவ்வளவு விசில், அவ்வளவு டான்ஸ், அவ்வளவு ஆரவாரம்... இவர்கள் வட துருவம் என்றால் தென் துருவமாக திகழும் இன்னொரு சமுதாய மக்களும் இறுதி ஊர்வலத்தில் இணைந்தனர்.... (ஏன் என்றால் அடுத்து பட்டியலில் அந்த ஏரியா உள்ளது... இவர்கள் கோர்ட்டில் ஸ்டே ஆர்டர் வாங்கி வைத்து உள்ளனர்... விசாரணையில் உள்ளது) சேர்ந்தது சந்தோசமே.... வேடிக்கை என்னவென்றால் இவர்கள் சேர்ந்து கொண்டு மூன்றாவதாக உள்ள சமுதாயத்தை சார்ந்தவர்களை அவ்வளவு கேவலமாக விமர்சனம் செய்து, ஒழிக கோசங்கள் முழக்கினர்...

அந்த மூன்றாவது சமுதாயத்தை சேர்ந்தவன் என்பதாலோ என்னமோ எனக்கு சற்று கோபம் வந்தது... ஆனால் யோசித்து பார்க்கையில் அந்த மக்கள் யாரிடம் கோபத்தை வெளிபடுத்த வேண்டும் என்று கூட தெரியாமல் இருக்கிறார்கள் என்றே தோனியது... இடிக்க சொன்னது நீதி துறை, அதை அமல்படுத்துவது நிர்வாக துறை (கலெக்டர், மாநகராட்சி மற்றும் பலர்), அதற்கு துணை நின்றது காவல் துறை... இவர்கள் மேல் கோபம் கொள்ளாமல் இதற்கு ஏன் ஜாதி சாயம் பூச வேண்டும்?? எது எப்புடியோ இதற்கு முத்தாய்ப்பாக முதல்வர் இறந்தவரின் குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதிஉதவி அறிவித்தார்... இறுதி கூட்டத்தில் முணுமுணுத்தவர் ஒன்று சொன்னார் : இந்த _________ பய இருந்தா கூட வாழ்க்கைக்கும் ஒரு லட்சம் சம்பாதிக்க மாட்டான் அவன் குடும்பத்துக்கு என்று.... சிரிப்பதா, வருந்துவதா அல்லது கோபபடுவதா என்று தெரியாத மனநிலையில் திரும்பினேன்....

No comments:

Post a Comment