சிவகாசி: மூன்று ஆண்டுக்கு முன் போடப்பட்ட சிவகாசி கன்னிசேரி ரோடு , பயன்படுத்த முடியாது சேதமடைந்துள்ளது. சிவகாசி கன்னிசேரி ரோடு மூலம் நாரணாபுரம், சல்வார்பட்டி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயனடைகின்றன. இந்த ரோட்டில் ,100க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள், பட்டாசு தொழில் சார்ந்த உபதொழிற் கூடங்கள், தீப்பெட்டி ஆபீஸ் அதிகம் உள்ளன. தொழிற்சாலைகள் அதிகம் உள்ளதால், இந்த ரோட்டில் வாகன போக்குவரத்தும் அதிகம் உள்ளது. மாணவர்களும் இதன் ரோட்டை அதிகம் பயன்படுத்துகின்றனர்.இதை கருத்தில் கொண்டு, 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த ரோடு, மூன்று ஆண்டுகளுக்கு முன் சீரமைக்கப்பட்டது. குறுகிய ரோடாகவும், அதிக வாகன போக்குவரத்து இருப்பதால் ,மூன்றாண்டுக்குள் ரோடு சேதமடைந்தது . பல இடங்களில் ரோடு துண்டித்தும் காணப்படுகிறது.
இதன் வழியில் நாரணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இருப்பதால் ,ஏராளமான பொதுமக்கள், கர்ப்பிணிகள் வருகின்றனர். இவர்கள் குண்டும்,குழியுமான ரோட்டை கடந்து வருவதற்குள் பெரும்பாடாகி விடுகிறது. இதே நிலை தொடர்ந்தால் ,இவ் வழியாக செல்லும் பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்படும் அபாயம் உள்ளது.பயன்படுத்த முடியாத அளவிற்கு மோசமாக உள்ள ரோட்டை சீரமைக்க , ஊராட்சி தலைவர்கள் கிருஷ்ணவேணி (நாரணாபுரம்) ஜெயமோகன் (சொக்கலிங்கபுரம்) கருப்பசாமி (சல்வார்பட்டி) பாண்டியம்மாள்(வாடியூர்) மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலை துறைக்கு புகார் செய்துள்ளனர். இருப்பினும் ரோடு சீரமைப்பு பணி துவங்கவில்லை. ரோடு வசதி செய்திட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதற்குள், ரோட்டை சீரமைக்க நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ""சிவகாசி கன்னிசேரி ரோட்டில் வாகன பெருக்கம் அதிகம் உள்ளதால், ரோட்டை அகலப்படுத்தி சீரமைக்க வேண்டும். தற்போது மூன்றரை கிலோ மீட்டர் தூரம் ரோடு சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்
No comments:
Post a Comment