Thursday, April 21, 2011

பெண் டாக்டர் இல்லாததால் கர்ப்பிணிகள் அலைக்கழிப்பு

news from dinamalar

                             சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் பெண் டாக்டர் இல்லாததால் கர்ப்பிணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் மாதத்திற்கு 50க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெற்றன. வாரத்தில் 10க்கும் மேற்பட்ட சிசேரியன் ஆப்பரேஷன்களும் நடந்தன. இதனால் கர்ப்பிணிகள் 24 மணிநேரமும் அரசு ஆஸ்பத்திரியை நாடி வந்தனர்.இந்நிலையில் 10 நாட்களாக இங்கிருந்த பெண் டாக்டர் மருத்துவ விடுப்பில் சென்றார். சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் கர்ப்பிணிகள் விருதுநகர், மதுரைக்கு செல்ல பரிந்துரைக்கப்படுகின்றனர். நள்ளிரவில் கர்ப்பிணிகள் அலைக்கழிக்கப்படுவதால் அவதிக்குள்ளாகின்றனர்.டாக்டர் இல்லாததை அறிந்து பலரும் அரசு ஆஸ்பத்திரிக்கு வருவதை தவிர்த்து வருகின்றனர். இதனால் பிரசவ கேஸ்கள் வெகுவாக குறைந்து விட்டது. சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் மயக்கவியல் பெண் டாக்டர் ஒருவர் உள்ளார். இவரும் ல் ஒவ்வொரு ஊரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சுழற்சி முறையில் சென்று வருகிறார்.அரசு ஆஸ்பத்திரியில் பெண் டாக்டர் மருத்துவ விடுப்பில் சென்றால் உடனே மாற்று பணியாக பிரசவத்திற்கு பெண் டாக்டர் நியமிக்க வேண்டும்.

                          ஆனால் மாவட்டத்திலேயே பிரசவம் பார்க்க பெண் டாக்டர்கள் நான்கு பேர் மட்டுமே உள்ளனர். இவர்கள் வாரத்தில் ஒருநாள் என ஒவ்வொரு ஊரிலும் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று வருகின்றனர். டாக்டர்களுக்கு பெரும் அலைச்சலுக்குள்ளாகின்றனர். இதனால் இருப்பவர்களும் விடுப்பில் செல்ல ஆர்வம் காட்டுகின்றனர்.அரசு ஆஸ்பத்திரிகளில் காலியாக உள்ள பெண் டாக்டர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட நிர்வாகம் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

news from dinamalar

No comments:

Post a Comment